Enable Javscript for better performance
ஒரே தேசம்; ஒரே தேர்தல் சாத்தியமற்றது: முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஒரே தேசம்; ஒரே தேர்தல் சாத்தியமற்றது: முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி

    By DIN  |   Published On : 19th June 2019 01:29 AM  |   Last Updated : 19th June 2019 01:29 AM  |  அ+அ அ-  |  

    krishnamurthy1


    ஒரே தேசம்; ஒரே தேர்தல் என்ற யோசனை நிர்வாக ரீதியாக ஈர்க்கக் கூடியதாக இருந்த போதிலும், நடைமுறையில் அது சாத்தியமில்லாதது என முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். 
    அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டாலும், மக்கள் பிரதிநிதிகளால் நிலையான ஆட்சி அளிக்கத் தவறும்பட்சத்தில் ஒரே நேரத்தில் தேசம் முழுவதும் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமின்றி போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 
     மக்களவைக்கும், சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற உள்ளதையடுத்து, இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 
    இதுகுறித்து டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்த கருத்து வருமாறு: 
    ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும்போது, ஏராளமான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பாக, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் துணை ராணுவத்தினரின் எண்ணிக்கையை  அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. 
    இதை நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு நன்மைகள் இருத்தபோதிலும், அரசியலமைப்பு விதிகளும், அது தொடர்பான பல விவகாரங்களும் தடையாக இருக்கும்.  மாநிலங்களில் சில ஆட்சி மாற்றங்கள் இரண்டரை ஆண்டுகளுக்குள் ஏற்படக் கூடும்; சில சமயங்களில் நான்கரை ஆண்டுகளில் கூட ஏற்படக்கூடும். அதுபோன்ற சூழலில், பொதுத் தேர்தல் நடைபெறும்வரை அங்கு இடைக்கால ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகும். 
    ஒரே தேசம்; ஒரே தேர்தல்- முழக்கத்தை பொருத்தவரை, அனைத்துக் கட்சியினர் மத்தியிலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது மிகவும் கடினம் என்றார் அவர். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp