பிரதமர் மோடி அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நான்கு தலைவர்கள்!

ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள  அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான 4 அரசியல் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந
பிரதமர் மோடி அழைப்பு விடுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நான்கு தலைவர்கள்!

ஒரே தேசம், ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெறவுள்ள  அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முக்கியமான 4 அரசியல் தலைவர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிய வந்துள்ளது.

ஒரே தேசம், ஒரே தேர்தல், நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டம், மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த தின கொண்டாட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கு, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 19) அழைப்பு விடுத்துள்ளார்.

ஆனால் மோடி அழைப்பு விடுத்திருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, டிஆர்எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், டிடீபி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற முக்கிய விவகாரம் குறித்து குறுகிய காலத்தில் ஆலோசனை நடத்துவதால், அந்த விவகாரம் தொடர்பாக எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. இதுகுறித்து அரசியலமைப்பு நிபுணர்கள், தேர்தல் நிபுணர்கள், அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தப்பட வேண்டும். அப்படியில்லாமல், உடனடியாக எந்த முடிவுக்கும் வர வேண்டாம் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தயாரித்து, அதை அனைத்து கட்சிகளுக்கும் அனுப்பி வைத்து, ஆலோசனைகளை பெற வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன். இதுபோல் செயல்பட்டால், முக்கியமான இந்த விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனைகளை திரிணமூல் காங்கிரஸ் அளிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவருமான கே.சந்திரசேகர் ராவ் பங்கேற்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அவருக்கு பதிலாக அவரது மகன் கே.டி.ராமா ராவ் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் கே.கேசவ ராவ் தெரிவித்தார்.

கடந்த மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற பிரதமர் மோடி பதவியேற்பு நிகழ்ச்சியிலும், கடந்த வாரம் நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்திலும் சந்திரசேகர் ராவ் பங்கேற்காமல் தவிர்த்துவிட்டார்.

காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை வரும் 21ஆம் தேதி சந்திரசேகர் ராவ் திறந்துவைக்கவுள்ளார். அதற்கான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com