தேர்தலின்போது வெளியான 40% செய்திகள் ஒருதலைபட்சமானவை: ஆய்வில் தகவல்

ஊடகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தேர்தல் தொடர்பான செய்திகளில் 40 சதவீதம், ஒருதலைபட்சமானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
தேர்தலின்போது வெளியான 40% செய்திகள் ஒருதலைபட்சமானவை: ஆய்வில் தகவல்


ஊடகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான தேர்தல் தொடர்பான செய்திகளில் 40 சதவீதம், ஒருதலைபட்சமானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலும், ஆந்திரம் உள்ளிட்ட 4 மாநிலங்களின் பேரவைத் தேர்தல்களும் நடைபெற்றன. அந்தக் காலக்கட்டத்தில் வெளியான தேர்தல் தொடர்பான செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து, பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
பல்வேறு ஊடகங்களில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 1.68 லட்சத்துக்கும் அதிகமான தேர்தல் தொடர்பான செய்திகள் ஆராயப்பட்டன. அதில் 40 சதவீத செய்திகள் ஒருதலைபட்சமாக வெளியிடப்பட்டன. செய்திகளில் போலியானவை எவை என்பது குறித்து ஆராய, சுமார் 9.5 லட்சம் செய்திகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சுமார் 33,000 செய்திகள் போலியானவை ஆகும்.
செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்தபிறகு, ஊடகங்கள் அச்செய்திகளை வெளியிட்டதால், போலியான செய்திகளின் எண்ணிக்கை குறைந்தது. ஏப்ரலில் வெளியான 85 சதவீத தேர்தல் தொடர்பான செய்திகள் உண்மைத்தன்மையுடனே இருந்தன என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com