புல்வாமாவில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி: அரசியல் கட்சிகள் கண்டனம்

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி போர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
புல்வாமாவில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி: அரசியல் கட்சிகள் கண்டனம்

புது தில்லி: புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் உடலில் கட்சிக் கொடி போர்த்தப்பட்டதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் அஜித் சாகோ உயிரிழந்தார். அவருடைய உடல் சொந்த ஊரான படாசோனாலோவில் அடக்கம் செய்யப்பட்டது.

அவருடைய உடல் கொண்டு வரப்பட்ட சவப்பெட்டியில் வழக்கப்படி தேசியக்கொடி போர்த்தப்பட்டு இருந்தது. ஆனால் அவருக்கு அஞ்சலி செலுத்த வந்த மாநிலத்தின் ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் கட்சியினர், உடலின் மீது தங்களது கட்சிக் கொடியை போர்த்தியுள்ளனர்.

சிறிது நேரத்தில் அந்தக் கொடியை உயிரிழந்த வீரரின் சகோதரர் பரமேஸ்வர் கட்சிக்கொடியை அகற்றினார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பா.ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்ததுடன்,பிஜு ஜனதா தளம் மன்னிப்பு கோரவேண்டும். எனக் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்திற்கு பிஜு ஜனதா தளம் கட்சியும் கண்டனம் தெரிவித்துள்ளது.  “ யார் இதற்கு பொறுப்பு என்பதை கட்சி கண்டுபிடித்து,  அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவைத்துள்ளது.

இதற்கிடையே இவ்விவகாரத்தை அரசியல் ஆக்கவேண்டாம் என்று உயிரிழந்த வீரரின் சகோதரர் பரமேஸ்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com