'2015-ல் இருந்து முதன்முறையாக' குறைந்தபட்ச ஸ்கோருக்கு கட்டுப்பட்ட இந்தியா!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 224 ரன்கள் சேர்த்தது.
'2015-ல் இருந்து முதன்முறையாக' குறைந்தபட்ச ஸ்கோருக்கு கட்டுப்பட்ட இந்தியா!

2019 ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் சனிக்கிழமை மோதின. 

சௌதாம்ப்டனில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக கேப்டன் கோலி 67, கேதர் ஜாதவ் 52 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக பந்துவீசிய ஆப்கானிஸ்தானின் அனைத்து பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். குல்பதின் நைப், முகமது நபி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறிப்பாக முஜீப்-உர்-ரஹ்மான் 10 ஓவர்களில் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். ரஷீத் கான் 10 ஓவர்களில் 38 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் சாய்த்தார். ரஹ்மத் ஷா 1 விக்கெட் எடுத்தார்.

இதன்மூலம் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தற்போது தான் முதல்முறையாக இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் 50 ஓவர்கள் விளையாடியும் குறைந்தபட்ச ஸ்கோருக்கு கட்டுப்பட்டுள்ளது. முன்னதாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

உலகக் கோப்பை தொடரில் குறைந்தபட்ச ஸ்கோரில் இந்திய அணி பெற்ற வெற்றிகளின் விவரம் பின்வருமாறு:

  • 1983-ல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 183 ரன்கள்
  • 2003-ல் நெதர்லாந்துக்கு எதிராக 204 ரன்கள்
  • 1992-ல் பாகிஸ்தானுக்கு எதிராக 216 ரன்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com