அங்கன்வாடிகளை இடம் மாற்றும் அதிகாரம்: மாநிலங்களுக்கு அளித்தது மத்திய அரசு

அங்கன்வாடி மையங்களை இடம் மாற்றியமைக்கும் அதிகாரத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
அங்கன்வாடிகளை இடம் மாற்றும் அதிகாரம்: மாநிலங்களுக்கு அளித்தது மத்திய அரசு

அங்கன்வாடி மையங்களை இடம் மாற்றியமைக்கும் அதிகாரத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.
சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 6 வயதுக்கும் குறைவான குழந்தைகளின் நலன்களை பராமரிப்பதற்கு கிராமப்புறங்களில் அரசால் அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்த மையங்களால் நாடு முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் சுமார் 10 கோடி பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த மையங்களில் சுமார் 26 லட்சம் பேர் பணி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் அங்கன்வாடி மையங்களுக்கு எளிதில் சென்று வருவதற்கு ஏதுவாக, தற்போது அந்த மையங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றியமைக்கும் அதிகாரத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
நாடு முழுவதும் 14 லட்சம் அங்கன்வாடி மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் அளிக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், அங்கன்வாடி மையங்களின் தேவைகள் குறித்து ஆய்வு செய்யும்படி மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 
கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகியோர் எளிதில் செல்ல ஏதுவாக, அங்கன்வாடிகளை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து வேறு இடத்தில் மாற்றியமைக்கும் அதிகாரத்தை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. அங்கன்வாடி மையங்களை வேறு இடத்துக்கு மாற்றும்போது, மையங்களை அமைக்க தேவைப்படும் நிலம், கட்டடம், கர்ப்பிணிகள், குழந்தைகள் ஆகிய அம்சங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும், நகர்ப்புற பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவுக்கும், கிராமப் புறங்களில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்கும், பழங்குடியினர் பகுதிகளில் இருந்து 1.5 கிலோ மீட்டர் தொலைவுக்கும் அப்பால் அங்கன்வாடிகள் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com