ககன்யான் விண்கலம் 2021 இறுதியில் அனுப்பப்படும்: இஸ்ரோ தலைவர் பேட்டி

இந்தியா சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டத்தின்படி, ககன்யான் விண்கலத்தை 2021}ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் இஸ்ரோ தலைவர்
திருநெல்வேலியில் இஸ்ரோ சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  செயற்கைக்கோள் தகவல் பதிவிறக்கும் நிலையத்தின் ஒரு பகுதி.
திருநெல்வேலியில் இஸ்ரோ சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  செயற்கைக்கோள் தகவல் பதிவிறக்கும் நிலையத்தின் ஒரு பகுதி.

இந்தியா சார்பில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முதல் திட்டத்தின்படி, ககன்யான் விண்கலத்தை 2021}ஆம் ஆண்டின் இறுதிக்குள் விண்ணில் செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் இஸ்ரோ தலைவர் கே.சிவன்.
இஸ்ரோ சார்பில் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோள் தகவல் பதிவிறக்கும் நிலையத்தை சனிக்கிழமை திறந்து வைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
சந்திரயான் } 2 செயற்கைக்கோள், ஜூலை 15}ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் சந்திரனில் அந்த செயற்கைக்கோள் இறங்கியதும், பல்வேறு புதிய தகவல்களைப் பெற முடியும். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில்  இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான ககன்யான் விண்கலம் திட்டத்தின் பணிகள் 2021}ஆம் ஆண்டில் நிறைவடையும். அந்த ஆண்டு இறுதிக்குள் ககன்யான் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும். தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி மையம் அமையுமா என்ற கேள்விக்கு தற்போது கருத்துக் கூற முடியாது என்றார் அவர்.
ரூ.14 கோடியில் நிலையம்: திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி அருகே இந்திய கடற்படைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.14 கோடி மதிப்பில் செயற்கைக்கோள் தகவல் பதிவிறக்கும் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளித் தகவல்களை பதிவிறக்கம் செய்து கட்டுப்பாட்டு மையங்களுக்கு தெரிவிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதுதவிர தென்னிந்திய கடல் பகுதிகளில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் உள்ளிட்டவற்றின் தகவல்களை ரேடார் மூலம் பெற்று தகவல் பரிமாறும் வகையில் இந்த நிலையத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதே வளாகத்தில் தகவல்களைச் சேகரிப்பதற்கான உயர்கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்கும் இஸ்ரோ தலைவர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மகேந்திரகிரி திரவ உந்தும ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அருணன் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com