அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவியுங்கள்: காங்கிரஸ் எம்.பி.யின் விநோத கோரிக்கை

அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.
அபிநந்தன் மீசையை தேசிய மீசையாக அறிவியுங்கள்: காங்கிரஸ் எம்.பி.யின் விநோத கோரிக்கை


புது தில்லி: அபிநந்தனின் மீசையை தேசிய மீசையாக அறிவிக்க வேண்டும் என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வலியுறுத்தியுள்ளார்.

ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவையில் இன்று பேசுகையில், இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானின் மீசையை தேசிய மீசையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும், அபிநந்தனின் வீரத்தை கௌரவிக்கும் வகையில் அவருக்கு விருது அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே விமானப் படை தாக்குதலின் போது பாகிஸ்தானின் எஃப்-16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப் படை வீரர் அபிநந்தனை உரிய முறையில் கௌரவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் முயன்றன. 

அந்த விமானங்களை இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது நடுவானில் நடைபெற்ற சண்டையில் பாகிஸ்தானின் போர் விமானம் ஒன்றை அபிநந்தன் வர்த்தமான் சுட்டுவீழ்த்தினார். அதேபோல், அவர் சென்ற போர் விமானமும் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் தப்பிய அபிநந்தன், பாகிஸ்தான் பகுதிக்குள் பாராசூட் மூலம் தவறுதலாக சென்றார். எனினும், பாகிஸ்தானால் பத்திரமாக அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com