சுடச்சுட

  

  நாம் உண்ணும் உப்பில் விஷமா? அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை

  By DIN  |   Published on : 25th June 2019 10:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  salt


  இந்தியாவில் உப்பு உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களின் உப்பில் அபாயகரமான பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 

  கோதம் தானியம் மற்றும் விவசாயப் பொருட்கள் தனியார் நிறுவனத்தின் தலைவர் சிவசங்கர் குப்தா. இவர், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உப்பில், பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் அதிகளவில் இருப்பதாக குற்றம்சாட்டினார். 

  அமெரிக்க ஆய்வகத்தில் நடத்திய ஆய்வின் முடிவில் சாம்பார் சுத்திரிக்கப்பட்ட உப்பு நிறுவன உப்பில் ஒரு கிலோவுக்கு 4.71 மில்லி கிராமும், டாடா உப்பு நிறுவன உப்பில் ஒரு கிலோவுக்கு 1.85 மில்லி கிராமும், டாடா லைட் உப்பில் ஒரு கிலோவுக்கு 1.90 மில்லி கிராம் பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் இருப்பது தெரியவந்துள்ளது. 

  உப்பு அல்லது எந்தவொரு உணவுப் பொருளிலும் விஷத்தன்மையுடைய பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் பயன்படுத்த உலகின் எந்தப் பகுதியிலும் அனுமதி கிடையாது என்று சிவசங்கர் குப்தா குற்றம்சாட்டினார். 

  மேலும், இந்தியாவில் உணவை பரிசோதிக்கும் எந்தவொரு ஆய்வகத்திலும், உப்பில் இருக்கும் சைனைட் அளவை கண்டுபிடிக்கும் அளவுக்கு போதிய வசதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  நாம் உண்ணும் உப்பில் விஷத்தன்மையுடைய பொட்டாசியம் ஃபெர்ரோசைனைட் இருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai