சுடச்சுட

  
  verappa_moily


  கருப்புப் பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
  வெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.35 லட்சம் கோடி இருப்பதாக கடந்த மார்ச் 28ஆம் தேதி வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித் துறை நிலைக் குழு மக்களவையில் அறிக்கை சமர்ப்பித்தது.
  மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அமைந்த புதிய நாடாளுமன்றத்தின் மூலம்தான் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.
  இந்நிலையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் வீரப்ப மொய்லி, செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  கருப்புப் பண பதுக்கல் தொடர்பான அறிக்கையை முதல்கட்ட அறிக்கையாக வைத்துக் கொள்ளலாம். போதிய நேரம் இல்லாமை காரணமாக சாட்சியங்களை அழைத்து விசாரிக்க முடியவில்லை. இதுதொடர்பாக தற்போது மக்களவையில் அமையும் நிதிக் குழு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.
  வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் குறித்த தகவல்களை மதிப்பீடு செய்வது கடினமானது அல்ல. 
  கருப்புப் பணம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு ஏழு அறிக்கைகளை சமர்ப்பித்தது. அனைத்து அறிக்கைகளையும் பெற்ற மத்திய அரசு, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
  காங்கிரஸ் ஆட்சியில் சட்டத் துறை அமைச்சராக நான் இருந்தபோது, வரிவிதிப்பு முறையில் திருத்தம் செய்து வரைவு மசோதாவை உருவாக்கியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அந்த மசோதாவை தொடரவில்லை என்றார் வீரப்ப மொய்லி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai