சுடச்சுட

  
  modi


  ஜி-20 அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மேக்ரான் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
  ஜப்பான் நாட்டின் ஒஸாகா நகரில்  ஜி-20 அமைப்பு நாடுகளின் 14-ஆவது உச்சி மாநாடு வரும் 28, 29ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்கள் ஜப்பான் செல்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டின் இடையே டிரம்ப், மேக்ரான் ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி தனித்தனியே சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார்.
  ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, துருக்கி அதிபர் எர்டோகன் உள்ளிட்ட தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். ரஷியா- இந்தியா-சீனா நாடுகளைக் கொண்ட ரிக் அமைப்பின் மாநாடு, ஜப்பான்- அமெரிக்கா-இந்தியா நாடுகளைக் கொண்ட ஜேஏஐ அமைப்பின் மாநாடு ஆகியவையும் நடைபெறுகிறது. இந்த 2 மாநாடுகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
  இந்தியாவில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக மிகப்பெரும் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியமைத்துள்ளது. நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து டிரம்பை மோடி முதல்முறையாக சந்தித்துப் பேச இருக்கிறார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai