சுடச்சுட

  

  நண்பனின் மனைவி மீதான காதலால் நண்பனைக் கொன்ற கொடூரன்: வசமாக சிக்கியது எப்படி?

  By DIN  |   Published on : 26th June 2019 11:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  murdera


  புது தில்லி: நண்பனின் மனைவி மீதான காதலால், நண்பனைக் கொன்றுவிட்டு நாடகமாடிய கொடூரன், காவல்துறையின் விசாரணையில் வசமாக சிக்கிக் கொண்டான்.

  குற்றவாளியான குல்கேஷ், கடந்த 24ம் தேதி இரவு தனது நண்பர் தல்பீரை அழைத்துக் கொண்டு ஸகிரா ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளான். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த குல்கேஷ், திடீரென தல்பீர் தலையில் செங்கல்லால் அடித்து மயக்கமடையச் செய்துவிட்டு தண்டவாளத்தில் வீசிவிட்டான்.

  ரயிலில் அடிபட்டு தல்பீர் மரணம் அடைந்தபிறகு காவல்துறையினருக்கு போன் செய்து, இங்கு ஒருவரின் உடல் தண்டவாளத்தில் துண்டு துண்டாகக் கிடப்பதாகக் கூறியுள்ளான்.

  விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

  முதற்கட்ட விசாரணையில், காவல்துறையினரின் கவனத்தை திசை திருப்ப குல்கேஷ் பல சித்து வேலைகளை செய்துள்ளான். ஆனால் தல்பீரின் செல்போனை ஆய்வு செய்த காவல்துறை, கடைசியாக அவர் குல்கேஷுடன் பேசியதை அறிந்ததும், விசாரணைப் பார்வையை குற்றவாளி மீது திருப்பினர்.

  கிடுக்கிப் பிடி விசாரணையில் குல்கேஷ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான். தல்பீரின் மனைவி மீதான காதலால் தான் இந்த கொலையை செய்ததாகவும், தல்பீரின் மனைவிக்கும் தன்னைப் பிடிக்கும் என்றாலும், திருமணம் செய்து கொள்ள மறுப்பதால், நண்பனைக் கொன்றுவிட்டு, நண்பனின் மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளான்.

  இந்த குற்றத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பிருக்கிறதா என்ற அடிப்படையில் காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai