சுடச்சுட

  


  நாட்டில் 2019ஆம் ஆண்டு மே இறுதி வரையிலான காலகட்டத்தில் ரூ.21.71 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
  2016-இல் மேற்கொள்ளப்பட்ட  பணமதிப்பிழப்புக்கு முன்பு இருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் 22 சதவீதம் அதிகரித்துள்ளதாக  மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: 
  பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி வரை ரூ.17,74,187 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2019ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிலவரப்படி, 21,71,385 கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இது 22 சதவீதம் அதிகரிப்பாகும். 
  கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 1000, 500 ரூபாய்  நோட்டுகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிதாக 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai