சுடச்சுட

  

  பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்த ரூ.7,255 கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 26th June 2019 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  பஞ்சாயத்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தேசிய கிராம சுயராஜ்ய திட்டத்துக்கு ரூ.7,255.50 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
  மக்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கிராமப் புறத்தில் நிர்வாக அமைப்பை மேம்படுத்தவும், வளர்ச்சியின்இலக்குகளை அடையவும் தேசிய கிராம சுயராஜ்ய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. கடந்த 2018-19 முதல் 2021-22-ஆம் ஆண்டு வரையிலான 4 ஆண்டு காலகட்டத்தில் இத்திட்டத்துக்காக ரூ.7,255.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  பஞ்சாயத்து அமைப்புகள் முழுவதும் சுயசார்புடன் செயல்பட வேண்டும். இதற்காக அனைத்து உதவிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து அமைப்புகளின் உறுப்பினர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் நோக்கில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. முக்கியமாக மனிதவளத்தை மேம்படுத்துவது, உரிய தொழில்நுட்ப வசதிகளை அளிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் பஞ்சாயத்து அளவில் மேற்கொள்ளப்படுகின்றன என்று அமைச்சர் தனது பதிலில் கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai