சுடச்சுட

  

  ஐ.பி மற்றும் ரா அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம் 

  By DIN  |   Published on : 26th June 2019 07:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  raw-logo1

   

  புது தில்லி: மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி மற்றும் ‘ரா’ அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மத்திய அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அசாம் - மேகாலயா பகுதியைச் சேர்ந்த  அதிகாரியான இவர் 1984- ம் ஆண்டு  பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார்.  மாவோயிஸ்ட்டுகள்  மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையாள்வதில் இவர் திறமை வாய்ந்தவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

  ‘ரா ’அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பஞ்சாபைச்  சேர்ந்த இவர் 1984- ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் 2016- ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மீது நடைபெற்ற இந்திய விமானப்படைத் தாக்குதல்ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் ஒருவராவார்.

  ‘ரா’ என்பது மத்திய அரசின் வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிக்கும் அமைப்பு ஆகும்.  அதேபோல மத்திய உளவுப் பிரிவு  ஐபி (IB) என்பது உள்நாட்டு புலனாய்வு அமைப்பு  ஆகும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai