சுடச்சுட

  

  ஓலா, உபர் வாகனங்கள் வழிமாறிச் செல்கிறதா?: கைகொடுக்க வரும் கூகுள் மேப் 

  By IANS  |   Published on : 26th June 2019 05:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  google_maps

   

  புது தில்லி: நீங்கள் புக் செய்யும் ஓலா அல்லது உபர் வாகனங்கள் நள்ளிரவில் வழிமாறிச் சென்றால், இனிமேல் உங்களுக்கு கூகுள் மேப் கைகொடுக்க வருகிறது.

  விமான நிலையத்தில் இருந்தோ, ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது நண்பர் ஒருவரின் இல்லத்தில் இருந்து நள்ளிரவில் நீங்கள் வீடு திரும்ப நேர்கையில் உங்களுக்கு ஓலா, உபர் வாகனங்கள் கைகொடுக்கும். ஆனால் சமயங்களில் நாம் புக் செய்யும் வாகனங்கள் வழிமாறிச் சென்று நமக்கு சிரமம் கொடுக்கலாம்.

  இந்நிலையில் நீங்கள் புக் செய்யும் ஓலா அல்லது உபர் வாகனங்கள் நள்ளிரவில் வழிமாறிச் சென்றால், இனிமேல் உங்களுக்கு கூகுள் மேப் கைகொடுக்க வருகிறது.

  இதுபோன்ற பயணங்களில் நீங்கள் உங்கள் அலைபேசியில் கூகுள் மேப்பை 'ஆன்' செய்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் செல்லும் வாகனமானது நிர்ணயிக்கப்பட்ட பாதையிலிருந்து 500 மீட்டர் விலகிச் செல்லும்  தருணத்தில் உங்கள் அலைபேசிக்கு ஒரு குறிப்பிட்ட வகை எச்சரிக்கை அறிவிப்புடன் உங்கள் அலைபேசி அதிரும். அந்த அறிவிப்பு செய்தியை நீங்கள் தொட்டவுடன், மூலப்பாதையில் இருந்து தற்போது இந்த வாகனம், எத்தனை தூரம் விலகிவந்துள்ளது என்பதைக் காட்டும்.   இதன் மூலம் நாம் வாகன நிறுவனத்திற்கோ அலல்து நமது உறவினர்களுக்கோ  தகவல் தெரிவித்து விடலாம்.

  "ஸ்டே ஸேபர்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியானது புதன்கிழமை முதல் கூகுள் மேப்பில்  தரப்படுகிறது. இந்த தகவலை கூகுள் மேப்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி பிரிவு மேலாளர் அமந்தா பிஷப் தெரிவித்துள்ளார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai