சுடச்சுட

  

  இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் இனி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாதாம்! 

  By IANS  |   Published on : 26th June 2019 06:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  JK_Election

   

  டெஹ்ராடூன்: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் இனி பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாத வகையில், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

  உத்தரகாண்ட் பஞ்சாயத்து ராஜ் சட்டம் - 2016 (திருத்தம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டமானது செவ்வாயன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாநில சட்டம் ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளினால் கூச்சல் குழப்பம் நிலவிய சூழலில், இந்த சட்டமானது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

  இந்த வருட இறுதியில் நடைபெற உள்ள மாநில பஞ்சாயத்து தேர்தல்களுக்கு முன்பாக இந்த சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.      

  இதுதொடர்பாக மாநில அமைச்சர் மதன் கௌஷிக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:   

  இந்த சட்டமானது குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்துவதுடன், பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியையையும் நிர்ணயிக்கிறது. அதேநேரம் ஒரு பஞ்சாயத்து உறுப்பினர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிப்பதையும் தடை செய்கிறது. இது ஒரு புரட்சிகர சட்டமாகும்.

  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

  இதுபோன்ற சட்டங்கள் முன்னர் ஒதிஷா மற்றும் ராஜஸ்தானில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai