பட்டப்படிப்பில் ஹிந்தி கட்டாயம்: சுற்றறிக்கையைத் திரும்பப்பெற வலியுறுத்தல்

நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக்


நாடு முழுவதும் இளநிலை பட்டப்படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயம் சேர்க்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அக் கட்சியின் அரசியல் தலைமைக் குழு வெளியிட்டுள்ள அறிக்கை:  இளநிலை பட்டப் படிப்பில் ஹிந்தி மொழிப் பாடத்தை கட்டாயமாக்கும் யுஜிசி-யின் முயற்சி கவலை அளிக்கிறது.  மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவில் ஹிந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டிருந்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அந்த அறிவிப்பை நீக்கி திருத்தப்பட்ட கல்விக் கொள்கையை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது.
எனவே, யுஜிசி தன்னிச்சையாக ஹிந்தி பாடத்தை இளநிலைப் பட்டப் படிப்பில் நுழைக்க முடியாது. யுஜிசி-யின் இந்த சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும். பல மொழி, கலாசாரம் இருந்தபோதும் இந்திய மக்கள் ஒற்றுமையுடன் இருக்கும் பண்பாட்டை கெடுத்துவிடும்.  எனவே, யுஜிசி இந்தச் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறும் வகையில், அனைத்து தரப்பு மக்களும், கல்வி அமைப்புகளும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com