மத்திய பாதுகாப்புப் படைகளில் 84,000 காலியிடங்கள்

மத்திய பாதுகாப்புப் படைகளில் 84,000-க்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மத்திய பாதுகாப்புப் படைகளில் 84,000-க்கும் அதிகமான இடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுத போலீஸ் படை, மத்திய ரிசர்வ் படை போலீஸ், எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை, சகஸ்தீர சீமாபல், இந்தோ-திபெத் எல்லை போலீஸ், அஸ்ஸாம் ரைபிள்ஸ் படை ஆகியவை மத்திய பாதுகாப்புப் படைகளாகும். இதில் இருக்கும்  காலியிடங்கள் குறித்து, மக்களவையில் கேள்வியெழுப்பப்பட்டிருந்தது. அதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பதவி ஓய்வு, விருப்ப ஓய்வு, மரணம் போன்ற காரணங்களினால், மத்திய பாதுகாப்புப் படைகளில் காலியிடங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. சராசரியாக, பல்வேறு பதவி நிலைகளிலும் 10 சதவீத காலியிடங்கள் ஆண்டுதோறும் உருவாகி வருகின்றன. தற்போதைய நிலையில், மத்திய பாதுகாப்புப் படைகளில் 84,037 காலியிடங்கள் உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் 57,373 கான்ஸ்டபிள் நிலையிலான பணியிடங்களுக்கு புதியவர்களை தேர்வு செய்வது தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டது. இதற்கு கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் துணை ஆய்வாளர் பதவிகளில் நிலவிய 1,094 காலியிடங்களை நிரப்ப 2018ஆம் ஆண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமாண்டர் பதவிகளில் நிலவிய காலியிடங்களை நிரப்புவதற்கு 2018ஆம் ஆண்டில் யுபிஎஸ்சி அமைப்பால் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது என்று அந்தப் பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com