மருத்துவம், சுகாதாரத்தில் கேரளம் முதலிடம்

மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் கேரளம் முதலிடத்தை


மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலை நீதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இதில் கேரளம் முதலிடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்கள் கடைசி இடங்களையும் பெற்றுள்ளன.
சுகாதார குறியீடு தொடர்பான செயல்திறன் தரவரிசை மதிப்பீடுகள் மூன்று பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டது. 
இதில் கேரளம் முதலிடம் பெற்றுள்ளது. ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப், ஹிமாசலப் பிரதேச மாநிலங்கள் முறையே 2,3, 4, 5 மற்றும் 6-ஆவது இடங்களை பெற்றுள்ளன. இதில் தமிழகம் 9-ஆவது இடத்தையே பெற்றுள்ளதாக நீதி ஆயோக் வெளியிட்ட ஆரோக்கியமான மாநிலங்கள்; முன்னேறும் இந்தியா  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் ஒடிஸா மாநிலங்கள் மிக மோசமான செயல்பாட்டை  கொண்டிருப்பதாக தரவரிசை மதிப்பீட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. சுகாதாரத் துறையில் முன்னேறி வரும் மாநிலங்களில் ஹரியாணா, ராஜஸ்தான், ஜார்க்கண்ட் ஆகியவை முன்னிலை வகிக்கின்றன.    
சிறிய மாநிலங்களை பொருத்தவரை ஒட்டுமொத்த செயல்திறனில் மிúஸாரம் முதலிடத்தையும், அதிகரிக்கும் செயல்திறனைப் பொருத்தவரை திரிபுரா, மணிப்பூர் மாநிலங்கள் முதல் மற்றும் இரண்டாம் இடங்களையும் பெற்றுள்ளன. சிக்கிம், அருணாசலப் பிரதேச மாநிலங்கள் மோசமான செயல்பாட்டைக் கொண்டுள்ளன. 
யூனியன் பிரதேசங்களில் சண்டீகர் முதலிடத்தையும், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியும் அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com