அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தல்?

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருந்தபோது மனரீதியான துன்புறுத்தலையே எதிர்கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 
அபிநந்தனுக்கு பாகிஸ்தானில் மனரீதியாக துன்புறுத்தல்?

இந்திய விமானப் படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருந்தபோது மனரீதியான துன்புறுத்தலையே எதிர்கொண்டதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் பாகிஸ்தான் பிடியில் இருந்தார். இதையடுத்து, அவர் நேற்று இரவு 9.20 மணியளவில் வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, அவருக்கு தில்லி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், பாகிஸ்தானில் மனரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டதாக அபிநந்தன் தெரிவித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், அவர் அங்கு உடல் ரீதியிலான எந்த துன்புறுத்தலையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்திருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com