கர்நாடகத்தில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்:  எடியூரப்பா

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடகத்தில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும்:  எடியூரப்பா

மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என அக் கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்தார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி அளவிலான பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது:
பாஜகவை நாடுமுழுவதும் வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு,  அதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  கட்சியை வளர்த்தெடுப்பதற்கு வாக்குச்சாவடி அளவிலான நிர்வாகிகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.  பெங்களூரு வடக்கு, பெங்களூரு தெற்கு, பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதிகள் உள்பட 10 மக்களவைத் தொகுதிகளின் முக்கிய நிர்வாகிகளுக்கு வெகு விரைவில் பயிலரங்கம் நடத்தப்படுகிறது.  இதன் வாயிலாக கட்சி வேலைகளை எப்படி முன்னெடுப்பது என்பது கற்றுத் தரப்படும். 
மக்களவைத் தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம்.  இதையொட்டி,  நாடு முழுவதும் உள்ள 4,250 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.  இது வெற்றிகரமாக நடைபெற்றது.
கட்சியைப் பலப்படுத்தி கர்நாடகத்தில் 22 தொகுதிகளை பாஜக கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளது.  நிர்வாகிகளுக்கு முழுநேர கட்சிப்பணி வழங்கப்படும்.  பிரதமர் மோடியின் 5 ஆண்டுகால சாதனைகளை வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். 
இந்தியாவின் வளர்ச்சிக்கு பிரதமர் மோடியின் தலைமை அவசியம் தேவைப்படுகிறது.  எனவே, அடுத்த முறையும் பிரதமராக மோடி தலைமைப் பொறுப்பேற்று நாட்டை வழிநடத்த பாஜகவினர் உழைக்க வேண்டும். 
உலக சக்தியாக இந்தியா வளர வேண்டுமானால்,  இந்தியாவை உலக நாடுகள் உற்றுநோக்க வேண்டும்.  அந்த கனவு நனவாக வேண்டுமானால், நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராக வேண்டும்.  
பிரதமர்மோடியின் சாதனைகளை சட்டப்பேரவைத் தொகுதிவாரியாகக் கொண்டு செல்ல வேண்டும். அடுத்த 7 வாரங்கள் முழுமையாக கட்சி வேலையில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com