இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் அபிநந்தன் 'மீசை'

பாகிஸ்தானின் எஞ்சிய போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படையின் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டாகும் அபிநந்தன் 'மீசை'

கடந்த மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தானின் பாலாகோட், முசாஃபராபாத், சகோட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் முகாம்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை, அவற்றை குண்டுவீசித் தகர்த்தது.

அதைத் தொடர்ந்து, கடந்த 27-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவின. 

இதைக் கண்டறிந்த இந்திய விமானப் படை, பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது. அப்போது பாகிஸ்தானின் "எஃப்-16' ரக போர் விமானம் ஒன்றை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியது.

அதேவேளையில், அந்நாட்டின் எஞ்சிய போர் விமானங்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப் படையின் மிக்-21 ரக போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் போர் விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த விமானத்தை இயக்கிய இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார். 

ஜெனீவா ஒப்பந்த விதிகளின் கீழ் அபிநந்தனை நிபந்தனையின்றி பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்று கூறிய இந்தியா, அவரது விடுதலைக்காக பாகிஸ்தானுடன் எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

அமைதிக்கான நல்லெண்ண நடவடிக்கையாக எந்தவித நிபந்தனையும் இன்றி அபிநந்தனை விடுவிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அபிநந்தன் இந்திய விமானப்படை அதிகாரிகளிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டார். 

இந்நிலையில், விங் கமாண்டர் அபிநந்தன் வைத்திருந்த மீசை தற்போது இளைஞர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் பெரும்பாலானோர் அவருடைய அந்த மீசை தோற்றத்துக்கு மாறி வருகின்றனர். இதற்கு சமூக வலைதளங்களிலும் அதிக அளவிலான வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அந்த மீசை தோற்றத்துடன் அபிநந்தனுக்கு ரசிகனாகிவிட்டேன், அவர் தான் நிஜ ஹீரோ, அவருடைய கம்பீரமான தோற்றம் என்னை கவர்ந்துவிட்டது என இளைஞர்கள் பலர் அவர்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com