60 ஆண்டுகள் கனவு பிப்ரவரியில் நினைவாகியுள்ளது: நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், டேராடூனில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 
60 ஆண்டுகள் கனவு பிப்ரவரியில் நினைவாகியுள்ளது: நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், டேராடூனில் திங்கள்கிழமை நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

பொய் பரப்புரைகளை தயவு செய்து நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன், பொய் பரப்புரைகள் குறித்து தெளிவுடன் இருங்கள். வீரர்களின் நேர்மையையும், எளிமையையும் தவறாக வழிநடத்த முயற்சிப்பவர்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.

கடந்த அரசு ஒரே ஓய்வு ஊதிய திட்டத்தினை வெறும் ரூ.500 கோடி மதிப்பீட்டில் தான் அனுமதி வழங்கியது. ஆனால், பாஜக அரசு கடந்த 2016-ஆம் ஆண்டே ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கியது. அதுமட்டுமல்லாமல் இந்த 3 ஆண்டுகளில் அனைத்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வங்கிக் கணக்குகளுக்கும் இந்த பணம் சரியாக சென்றடைய நடவடிக்கை எடுத்துள்ளது. இனி வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.8 ஆயிரம் இந்த ஓய்வு ஊதிய திட்டத்தில் கூடுதலாக இணைக்கப்படும்.

இந்தியாவில் இதுவரை 4 முக்கிய போர்கள் நடந்துள்ளன. ஆனால், அந்த போரின் போது வீரமரணமடைந்து நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக ஒரேயொரு நினைவிடம் கூட அமைக்கப்பட்டதில்லை. கடந்த 60 ஆண்டுகளாக தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னம் கனவாக மட்டுமே இருந்தது. அந்த கனவு தற்போது பிப்ரவரி மாதம் முதல் நினைவாகியுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com