ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் சந்தேகத்துக்குரிய 87,000 டெபாசிட்டுகள்: வருமான வரித்துறை இறுதி ஆய்வு

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட 87,000 வங்கிக் கணக்குகளை இறுதி ஆய்வுக்கு
ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் சந்தேகத்துக்குரிய 87,000 டெபாசிட்டுகள்: வருமான வரித்துறை இறுதி ஆய்வு


ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட காலகட்டத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்ட 87,000 வங்கிக் கணக்குகளை இறுதி ஆய்வுக்கு வருமான வரித் துறை எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்குகளை வைத்துள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை சட்டம் 144-ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்கள் ரூபாய் நோட்டு வாபஸ் காலகட்டத்தில் அதிகஅளவில் பணத்தை டெபாசிட் செய்துள்ளதுடன், வருமான வரிக் கணக்கையும் தாக்கல் செய்யாமல் உள்ளனர். எனவே ,அவர்கள் எவ்வளவு தொகையை வருமான வரியாக செலுத்த வேண்டும் என்பதை இனி அதிகாரிகளே முடிவு செய்து அவர்களுக்கு அதனை அறிவுறுத்துவார்கள்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சியில் முக்கிய நடவடிக்கையாக கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்து ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து, அந்த நோட்டுகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வங்கியில் டெபாசிட் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது, பெருமளவிலான அந்த நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டன. இதில், வழக்கத்துக்கு அதிகமாக பெருமளவிலான தொகையை டெபாசிட் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறை கணக்கில் எடுத்து, அந்த கணக்குக்கு உரிய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டது. அந்த வகையில் மொத்தம் 3 லட்சம் வங்கிக் கணக்குகள் அளவுக்கு அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டதாக அப்போது வருமான வரித்துறை கண்டுபிடித்தது. அதில், வங்கிக் கணக்கு வைத்திருந்தவர்கள் அளித்த விளக்கம், அவர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த விவரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சந்தேக வட்டத்தில் இருந்து பல வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன. இறுதியாக 2017-18 நிதியாண்டில் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாத 87,000 வங்கிக் கணக்குகள் இறுதி ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com