தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது என தேர்தல் ஆணையம்
தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படம் கூடாது: தேர்தல் ஆணையம் உத்தரவு


புதுதில்லி: அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படங்களை பயன்படுத்துக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. 

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளதால், அதற்கு முன்பாக தேர்தலை நடத்தி முடிப்பதற்காக தேர்தல் ஆணையம் பல முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள், தேர்தல் குறித்து அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் என அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.  மக்களவைத் தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு தினங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. தேர்தலை இம்முறை 7 அல்லது 8 கட்டங்களாக நடத்தவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிகின்றன.

இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணையத்தின் செயலாளர் பிரமோத் குமார் சர்மா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ராணுவ தளபதி, ராணுவ வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் ராணுவ விழாக்கள் தொடர்பான புகைப்படங்களை தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கோ, பிரசாரத்துக்கோ எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என்றும், இது தொடர்பாக கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சில அரசியல் கட்சிகள், தலைவர்கள், வேட்பாளர்கள் ராணுவத்தினரின் புகைப்படங்களை தங்கள் தேர்தல் பிரசார விளம்பரங்களில் பயன்படுத்துவதாக ராணுவ அமைச்சகம் தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு கொண்டு வந்ததாகவும், இதைத்தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com