சுடச்சுட

  

  இந்தியா, ஆப்கானிஸ்தானால் பாகிஸ்தானுக்கு நெருக்கடி: ஷா முகமது குரேஷி

  By DIN  |   Published on : 14th March 2019 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  kureshi


  கிழக்கு, மேற்கு எல்லைகளில் பாகிஸ்தான் சவாலை எதிர்கொண்டிருக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்தார்.
  பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வர்த்தக தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று குரேஷி பேசியதாவது:
  கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள இந்திய எல்லையிலும், மேற்கு பிராந்தியத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் எல்லையிலும் சவாலை எதிர்கொண்டிருக்கிறோம். புல்வாமா தாக்குதலுக்கு பிறகு கடந்த சில தினங்களாக இருநாடுகளுக்கு இடையே என்ன நடந்தது என்பதை நீங்கள் அறிவீர்கள். 
  புதிய பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற பிறகு, இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.
  இந்தியா ஒரு படி இறங்கி வந்தால், இஸ்லாமாபாத் இரண்டு படிகள் இறங்கி வரும் என்றும் அவர் உறுதியளித்துவிட்டார்.
  அமைதிப் பேச்சுவார்த்தை மூலம், இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றே பாகிஸ்தான் விரும்புகிறது.
  இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
  கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் இம்ரான் கான் பிரதமராகப் பதவியேற்றார். அப்போது ஊழல், சமூகப் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை அவர் எதிர்கொண்டிருந்தார்.
  இந்த அரசின் ஆட்சிக் காலம் முடிவடையும் போது பல்வேறு மாற்றங்களை பாகிஸ்தான் மக்கள் காண்பார்கள். பாகிஸ்தானில் உள்ளவர்கள் சுவிட்சர்லாந்து வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கி வைக்கவில்லை. முதலீட்டுக்கு ஏற்ற நாடாக பாகிஸ்தானை மாற்ற பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருகிறது. 
  எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். ஈரான், சீனா ஆகிய நாடுகளுடன் வர்த்தக உறவில் ஈடுபட்டு வருகிறோம் என்றார் குரேஷி.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai