சுடச்சுட

  

  பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் மன்மோகனை விட மோடி சிறந்தவர்: ஷீலா தீட்சித்

  By DIN  |   Published on : 14th March 2019 09:07 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sheela_dixit

   

  தனியார் தொலைக்காட்சிக்கு தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,

  பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி எடுத்த நடவடிக்கைகளை விட அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். பதிலடி தாக்குதல்களில் பிரதமர் மோடி சிறந்தவராக திகழ்கிறார்.

  அதுபோன்று மக்களும் பிரதமர் மோடியை சிறந்த தலைவராக பார்க்கின்றனர். ஆனாலும் அவற்றை அரசியல் ஆதாயங்களுக்காக செய்கிறார் என்று நினைக்கிறேன். அதேபோன்று இந்திரா பிரதமராக இருந்தபோது இந்நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குரியாக இருந்ததா? என ஷீலா தீட்சித் தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில், தனது இந்த பேட்டிக்கு விளக்கம் அளிக்கும் விதமாக ஷீலா தீட்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய அந்த பேட்டியை சில ஊடகங்கள் திரித்து வெளியிடுகிறது.

  ஆனால், அதில் நான் கூறியது, சிலருக்கு பயங்கரவாத விவகாரங்களில் பிரதமர் மோடி சிறந்த தலைவராக தெரியலாம். ஆனால், அவை எல்லாம் அவர் அரசியல் காரணங்களுக்காக செய்கிறார். நமது தேசப்பாதுகாப்பு எப்போதுமே பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. இந்திராவும் சிறந்த தலைவர்தான். நான் கூறியதை தவறாக புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai