சுடச்சுட

  
  Tom_Vadakkan_2

   

  மூத்த காங்கிரஸ் தலைவர், திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ஆகியோர் பாஜக-வில் வியாழக்கிழமை இணைந்தனர்.

  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டாம் வடக்கன், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜக-வில் இணைந்தார். இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் திருச்சூரில் இருந்து டாம் வடக்கன் போட்டியிட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

  இதுகுறித்து டாம் வடக்கன் கூறியதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நம் நாட்டின் மீது தாக்குதல் நடத்தினர். அதுதொடர்பான காங்கிரஸ் கட்சியின் கருத்து எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. அதுபோன்ற தேச நலனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள கட்சியில் இருக்க கூடாது என்பதால் வேறு வழியின்றி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினேன் என்றார்.

  இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அர்ஜுன் சிங், பாஜக-வில் தன்னை இணைத்துக்கொண்டார். தில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தனக்கான உறுப்பினர் அடையாள அட்டையை பெற்றுக்கொண்டார். 

  அதுபோன்று, கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ், பாஜக-வில் இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனது ராஜிநாமா கடிதத்தை கர்நாடக பேரவைத் தலைவரிடம் மார்ச் 4-ஆம் தேதி சமர்பித்துவிட்டேன். ஆனால், இதுவரை எனது ராஜிநாமா ஏற்கப்படவில்லை. இன்னும் இரு தினங்களில் ஏற்றுக்கொள்ளப்படும் என நம்புகிறேன். நான் பாஜக-வில் இணைந்துவிட்டேன் என்று தெரிவித்தார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai