சுடச்சுட

  

  மசூத் அஸாருக்கு எதிரான ஆதாரங்களை சீனா மட்டுமே நிராகரிக்கிறது: சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர்

  By DIN  |   Published on : 14th March 2019 03:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Gautam_Bambawale

   

  பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை, ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் தீர்மானத்துக்கு, சீனா மீண்டும் முட்டுக்கட்டை போட்டுள்ளது.

  கடந்த காலங்களில் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தனக்கு உள்ள "வீட்டோ' அதிகாரத்தின் மூலம் சீனா தடுத்துவிட்டது. இப்போதும் சீனா முட்டுக்கட்டை போட்டிருப்பது இந்தியாவுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

  இதுகுறித்து சீனாவுக்கான முன்னாள் இந்திய தூதர் கௌதம் பம்பவ்லே கூறியதாவது:

  மொத்தம் 1,267 பரிந்துரைகள் இருந்தும் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க சீனா தொடர்ந்து 4-ஆவது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மசூத் அஸார் குறித்து போதிய தகவல்கள் இல்லாத காரணத்தால் இவ்வாறு செய்வதாக சீனா தொடர்ந்து கூறி வருவது எல்லோரும் அறிந்ததுதான்.

  ஆனால், இந்திய தரப்பில் இருந்து போதிய ஆதாரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா போன்ற பல உலக நாடுகளுக்கு அந்த ஆதாங்கள் போதுமானதாக இருக்கும் போது, சீனா மட்டுமே அவற்றை நிராகரித்து வருகிறது.

  சீனா உண்மையாகவே பயங்கரவாதத்தை எதிர்க்கிறது என்றால், இந்த தீர்மானம் அடுத்தகட்டத்துக்கு செல்ல ஆதரவு அளிக்க வேண்டும். மசூத் அஸார் விவகாரத்தில் சீனாவிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வரும் என்றார்.   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai