சுடச்சுட

  

  மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விபத்து: 5 பேர் உயிரிழப்பு

  By DIN  |   Published on : 14th March 2019 10:15 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mumbai_Core  மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

  மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலம் இன்று மாலை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 34 பேர் காயமடைந்திருப்பதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

  இதில், காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்பு படை அந்தேரியில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். தற்போது மீட்பு பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். 

  இதனால், அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.  

   

   


  புகைப்படங்கள்: ஏஎன்ஐ

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai