சுடச்சுட

  

  மும்பை நடைமேம்பால விபத்து: பிரதமர் இரங்கல்; முதல்வர் ஃபட்னாவிஸ் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

  By DIN  |   Published on : 14th March 2019 11:02 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mumbai_Bridge_Collapse_PTI_2


  மும்பை நடைமேம்பால விபத்துக்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்தார். 

  மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள கசாப் நடைமேம்பாலம் இன்று மாலை இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   

  இதுகுறித்து பிரதமர் மோடி தனது இரங்கலில், 

  "மும்பை நடைமேம்பால விபத்து என்னை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எண்ணியே எனது எண்ணங்கள் உள்ளது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மகாராஷ்டிர அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்றார்.

  மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில், 

  "இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும். அவர்களுக்கு மாநில அரசே சிகிச்சை அளிக்கும். இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த பாலம் தரமாக உள்ளது என்று சான்று வழங்கப்பட்ட பிறகு இந்த சம்பவம் நிகழந்துள்ளது. இதன்மூலம், இந்த சம்பவம் சான்று வழங்கப்பட்டதை கேள்வி எழுப்பியுள்ளது. இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். 

  இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் புனித ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, மும்பை மேயர் விஷ்வநாத் மஹதேஷ்வர் மற்றும் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த் சாவந்த் ஆகியோர் காயமடைந்தவர்களை நேரில் சந்திப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai