சுடச்சுட

  

  ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம்

  By DIN  |   Published on : 14th March 2019 08:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Bipin_Rawat_conferred_with_Param_Vishisht_Seva_Medal_1

   

  ராணுவ தளபதி பிபின் ராவத்-க்கு 'பரம் விசிஷ்ட சேவா' பதக்கம் வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பாதுகாப்புத்துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் விதமான இவ்விருதுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.  

  ராணுவ வீரர் விரஹம பால் சிங் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ராஜேந்திர ஜெயின் மற்றும் ரவீந்திர பப்பன் தன்வாடே ஆகியோருக்கு 'கீர்த்தி சக்ரா' பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

  மேலும் ராணுவம் மற்றும் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் அதிகாரிகள் 12 பேருக்கு 'ஷௌர்ய சக்ரா' பதக்கம் வழங்கி கௌரவித்தனர். இந்த நிகழ்ச்சியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai