கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 16-இல் வெளியீடு

மார்ச் 16-இல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் 16-இல் வெளியீடு


மார்ச் 16-இல் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: 
கர்நாடகத்தில் காங்கிரஸ்- மஜத கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளது. தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணி தர்மத்தின்படி தொகுதிகளை ஒதுக்கீடு செய்து கொள்வோம். தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. 
காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கும் இரண்டொரு தொகுதிகள் கூடியோ, குறைந்தோ வரும். என்றாலும் இரு கட்சியினரும் ஒற்றுமையாக தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவை தோற்கடிக்க திட்டமிட்டுள்ளோம். மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் தயாராக உள்ளது. 
மார்ச் 16-ஆம் தேதி காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மார்ச் 18-ஆம் தேதி கர்நாடக மாநில கலபுர்கியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காங்கிரஸ் மாநாட்டில் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அதைத் தொடர்ந்து பெங்களூரிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் மாநாடு நடத்தப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com