கர்நாடகம்: காங்கிரஸ் 20, மஜத 8 தொகுதிகளில் போட்டி

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 8 இடங்களிலும் போட்டியிடவுள்ளன.


கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 20 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 8 இடங்களிலும் போட்டியிடவுள்ளன.
கேரள மாநிலம், கொச்சியில் புதன்கிழமை மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கர்நாடகத்தில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டது.
உத்தர கன்னடா, சிக்கமகளூரு, சிவமொக்கா, தம்கூர், ஹஸன், மாண்டியா, பெங்களூரு (வடக்கு),  விஜயபுரம் ஆகிய 8 தொகுதிகளில் மஜத போட்டியிடவுள்ளது.
முன்னதாக, மக்களவைத் தேர்தலில் 12 இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கூட்டணி கட்சியான காங்கிரஸிடம் மஜத கோரிக்கை விடுத்திருந்தது. பின்னர், மஜத தலைவர் ஹெச்.டி.தேவெ கௌடா, தங்களுக்கு 10 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸிடம் கோரிக்கை விடுத்தார். இந்த சூழலில் அக்கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மாண்டியா, ஹஸன் ஆகிய தொகுதிகளில் தேவெ கௌடாவின் பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோர் களம் இறக்கப்படுவார்கள் என்று மஜத ஏற்கெனவே அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
நிகில் குமாரசாமி, கர்நாடக முதல்வர் குமாரசாமியின் மகன் ஆவார். அந்த மாநில பொதுப் பணித் துறை அமைச்சரான ஹெச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com