மக்களவைத் தேர்தல்: 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலையொட்டி, 21 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்டது.
மக்களவைத் தேர்தல்: 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்


மக்களவைத் தேர்தலையொட்டி, 21 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் புதன்கிழமை வெளியிட்டது.
இதில், உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சுஷில் குமார் ஷிண்டே உள்ளிட்டோரின்
பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 
ராஜ் பப்பர், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியிலும்; ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், கான்பூர் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். 
மகாராஷ்டிர மாநிலம்,  சோலாப்பூர் தொகுதியில் ஷிண்டே,  வடமத்திய மும்பை தொகுதியில் பிரியா தத், நாகபுரியில் காங்கிரஸ் விவசாயிகள் அணி தலைவர் நானா படோலே, தெற்கு மும்பை தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா ஆகியோர் போட்டியிட உள்ளனர். பாஜகவிலிருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்த சாவித்ரி புலேவுக்கு, பஹ்ரெய்ச் தொகுதியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம்கட்ட பட்டியலில், உத்தரப் பிரதேசத்தில் 16 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக, கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உள்பட 15 பேரின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியலை, அக்கட்சி கடந்த 7-ஆம் தேதி வெளியிட்டது. அதில், ரேபரேலி தொகுதியில் சோனியாவும், அமேதி தொகுதியில் ராகுலும் போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், முன்னாள் மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ஜிதின் பிரசாத், ஆர்.பி.என்.சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com