மாற்றுக் கட்சியினரையும் ஆதரிக்கும் மாண்பு சிவசேனைக்கு உண்டு: உத்தவ் தாக்கரே

மாற்றுக் கட்சியினரையும் ஆதரிக்கும் மாண்பு சிவசேனைக்கு உண்டு என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மாற்றுக் கட்சியினரையும் ஆதரிக்கும் மாண்பு சிவசேனைக்கு உண்டு: உத்தவ் தாக்கரே


மாற்றுக் கட்சியினரையும் ஆதரிக்கும் மாண்பு சிவசேனைக்கு உண்டு என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவரின் மகன் பாஜகவில் இணைந்ததற்கு சரத் பவார் தெரிவித்த கருத்துக்கு, உத்தவ் தாக்கரே இவ்வாறு பதிலளித்துள்ளார்.
மூத்த காங்கிரஸ் தலைவரும், மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மகன் சுஜய் விகே பாட்டீல் அந்த மாநிலத்தின் அகமது நகர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸ் கூட்டணியில், அஹமது நகர் மக்களவைத் தொகுதி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டது. அதையடுத்து அந்த தொகுதியை தனக்கு விட்டுத் தருமாறு சரத் பவாரிடம் சுஜய் வேண்டினார். சரத் பவார் மறுத்துவிட்டதால், அதிருப்தியடைந்த சுஜய் விகே பாட்டீல், செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார்.
இதுகுறித்து சரத் பவார் கூறுகையில், வேண்டியது கிடைக்காவிட்டால் குழந்தைகள் அடம் பிடிப்பது போல, பாஜகவுக்கு மாறி குழந்தைத்தனமான முடிவை சுஜய் எடுத்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே நான் முன்னுரிமை அளிக்க முடியும். சொந்த கட்சிக்கு முன்னுரிமை அளித்த பின்னர்தான் மற்ற கட்சியினருக்கு முக்கியத்துவம் அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரேவை புதன்கிழமை சந்தித்த சுஜய் விகே பாட்டீல் , தனக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.  அதன் பின்னர் மும்பையில் செய்தியாளரிடம்  உத்தவ் தாக்கரே பேசுகையில்,  எனது சொந்த கட்சியின் உறுப்பினர்கள் மீது எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதே அளவு அக்கறை என்னைத் தேடி வருவோர் மீதும் உள்ளது. சிவசேனை கட்சி பொதுமக்களுக்கான கட்சி. மற்ற கட்சிகளை போன்று சுயநலமாக செயல்படாது. மாற்றுக் கட்சியனரையும் ஆதரிக்கும் மாண்பு சிவசேனைக்கு உள்ளது என்றார். 
மேலும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், அதை விரைவில் அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் உள்ள 48 தொகுதிகளில், பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் சிவசேனை 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com