சுடச்சுட

  

  அரசியலில் பகை பாராட்ட மாட்டேன்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

  By DIN  |   Published on : 15th March 2019 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nitin_gadkari


  அரசியலில் போட்டியாளர்களிடம் பகை உணர்வு கொள்ள மாட்டேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
  மகாராஷ்டிரத்தில் நாகபுரி மக்களவைத் தொகுதியில், நிதின் கட்கரியை எதிர்த்து  முன்னாள் பாஜக எம்.பி.யான நானா படோல் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், நிதின் கட்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நானா படோலின் பெயர் இடம்பெற்றுள்ளது. நிதின் கட்கரி பாஜக சார்பில் நாகபுரியில் போட்டியிடவுள்ளார்.
  அந்நகருக்கு வியாழக்கிழமை வருகை தந்த நிதின் கட்கரி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேர்தலில் யார் வேண்டுமானாலும் யாரை எதிர்த்தும் போட்டியிடலாம். எந்த வேட்பாளரையும் நான் விமர்சிக்க விரும்பவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தொகுதியில் நான் மேற்கொண்ட நலத் திட்ட பணிகளை மேற்கோள்காட்டி மக்களிடம் வாக்கு சேகரிப்பேன் என்றார் அவர்.
  பாஜகவில் படோல் இருந்தபோது உங்களிடம் ஆசி பெற்றிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
  அதற்கு, ஒருவர் கட்சியிலிருந்து விலகிவிட்டால், வாழ்த்திய வாழ்த்தும் விலகிச் சென்றுவிடுமா? நான் யாரிடமும் பகை உணர்வு கொள்ள மாட்டேன். படோலுக்கு எனது வாழ்த்துகள் எப்போதும் இருக்கும் என்று பதிலளித்தார் கட்கரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai