சுடச்சுட

  

  இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் பிரச்னைக்குரியது

  By DIN  |   Published on : 15th March 2019 04:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sunil

  கடற்படை தளபதி சுனில் லாம்பா


  இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான்; எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்று கடற்படை தளபதி சுனில் லாம்பா தெரிவித்துள்ளார்.
  அரசு முறைப் பயணமாக 4 நாள் பிரிட்டன் சென்றுள்ள கடற்படை தளபதி சுனில் லாம்பா, லண்டனில் நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அங்கு அவர் கூறியதாவது: இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கப்பல்கள் கட்டுவதில் சீனா அதிக அளவு செலவிட்டு வருகிறது. சீனாவை போல மற்ற எந்த நாடுகளும் கப்பல் கட்டுவதற்காக செலவிடுவதில்லை. இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் எந்நேரமும் சீனாவின் 6-8 கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் காணப்படுகின்றன. இது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான். எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. 
  கடல்சார் பாதுகாப்பில், இந்தியா-பிரிட்டன் இடையிலான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலுப்பெற்றுள்ளது. இந்தியா-பிரிட்டன் கடற்படைகள் இணைந்து மேற்கொள்ளும் கொங்கன் கடல்சார் பயிற்சியினால் இருநாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேம்பட்டுள்ள்ளது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும், கொங்கன் கடல்சார் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய கப்பல் வரவுள்ளது. கடல்சார் பாதுகாப்பில் இரு நாடுகளிடையே கருத்தொற்றுமை உள்ளது. 
  அதுமட்டுமன்றி, இரு நாடுகளின் கடற்படைக்கும் நிறைய ஒற்றுமை உள்ளது. பொதுவான இலக்கு, எதிர்கால பாதுகாப்பு குறித்த தெளிவான பார்வை, கப்பல் கட்டும் திட்டங்கள், கடல்சார் பாதுகாப்பில் புத்தாக்க திட்டங்கள் அனைத்திலும் இரு நாடுகளும் ஒரே பாதையில் பயணிக்கிறது என்றார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai