சுடச்சுட

    

    சீனாவிடம் சரணடைந்துவிட்டது பாஜக: ஒமர் அப்துல்லா விமர்சனம்

    By DIN  |   Published on : 15th March 2019 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    omar_abdula


    சீனாவிடம் பாஜக சரணடைந்துவிட்டதாக ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.
    இது தொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
    பாகிஸ்தான் தீவிரவாதி மசூத் அஸார் விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி சீனாவிடம் சரணடைந்துவிட்டார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலைக் காலதாமதப்படுத்துவதன் மூலம், பாகிஸ்தானிடம் அவர் சரணடைந்துவிட்டார். பயங்கரவாதத்துக்கு எதிராகவும், உள்நாட்டுப் பாதுகாப்புக்காகவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பாஜக எவ்வாறு கூற முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
    மேலும், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாதைக் குறிப்பிட்டு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், கடந்த 2017-ஆம் ஆண்டு அனந்த்நாக் இடைத்தேர்தலை ஒத்திவைத்து, பாகிஸ்தானுக்கு சிறிய அளவிலான வெற்றியை பாஜக கொடுத்தது. தற்போது, சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தாமல் அந்நாட்டுக்கு முழு வெற்றியையும் கொடுத்துள்ளது. 
    பாகிஸ்தான் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதற்கான காரணங்களை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி அளிக்கவில்லை. பாஜக தலைவர்களும், கட்சியினருமே அளித்து வருகின்றனர் என்று அவர் பதிவிட்டிருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai