சுடச்சுட

  

  தேர்தலில் தவறு ஏற்பட வாய்ப்பு அளிக்க கூடாது: தலைமைத் தேர்தல் ஆணையர்

  By DIN  |   Published on : 15th March 2019 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sunil-Arora


  மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைமுறைகளில் தவறு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய தேர்தல் பார்வையாளர்களிடம் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவுறுத்தினார்.
  மாறிவரும் சூழலில், பணம், பதவி, சமூக வலைதளங்கள் போன்றவை புதிய சவால்களாக இருப்பதாக சுனில் அரோரா அவர்களிடம் சுட்டிக்காட்டினார். 
  மத்திய தேர்தல் பார்வையாளர்கள் சுமார் 1,800 பேருக்கு தேர்தல் பணிகள் தொடர்பாக முதல் விளக்கக் கூட்டம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லாவாசா, சுஷில் சந்திரா உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
  இதுதொடர்பாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
  தேர்தல் பார்வையாளர்கள் மிகக் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும், தவறு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சுனில் அரோரா அறிவுறுத்தினார். சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு போன்றவற்றில் ஏற்பட்ட தவறுகளால், தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்பட்டதற்காக கிடைக்க வேண்டிய நற்பெயர் பின்னுக்குத் தள்ளப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
  தேர்தல் பார்வையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் கவனம் பிறழாமல் செயல்பட வேண்டும் என்று கூறினார். சுதந்திரமாக, நியாயமாக, வெளிப்படையாக தேர்தல் நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை இல்லை என்றும், அது உரிய நெறிமுறைகளின் படியும் நடத்தப்படுவதை உறுதி செய்வதும் அதன் பணி என்றும் சுனில் அரோரா கூறினார் என்று அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்.
  மேலும், இந்தத் தேர்தலில் முதல் முறையாக தேர்தல் பார்வையாளர்களுக்கென அப்சர்வர் ஆப் என்ற செல்லிடப்பேசி செயலியையும் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தேர்தல் பார்வையாளர்கள் தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க இயலும். 
  அத்துடன், முக்கியமான தகவல்கள், அவசர செய்திகள் போன்றவற்றை தேர்தல் ஆணையம் அந்தச் செயலி மூலம் அவர்களுக்கு வழங்க உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai