சுடச்சுட

  

  மும்பையில் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் பலி

  By DIN  |   Published on : 15th March 2019 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mumbai

  மும்பையில் ஜ்நடைமேம்பாலம் இடிந்து விழுந்த பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த, மீட்புக் குழுவினர்.


  மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேம்பாலத்தின் பெரும்பகுதி வியாழக்கிழமை இடிந்து விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
  இச்சம்பவம் குறித்து பேரிடர் மேலாண்மை குழு அதிகாரிகள் கூறியதாவது:
  தெற்கு மும்பையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டடத்தையும், சதிரபதி சிவாஜி ரயில் நிலையத்தையும் இணைக்கும் நடைமேம்பாலம் ஒன்று உள்ளது. அந்த மேம்பாலத்தின் பெரும்பகுதி வியாழக்கிழமை இரவு சுமார் 7.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது அந்த பாலத்தின் கீழே சென்றுகொண்டிருந்த சில வாகனங்கள் மீது பாலத்தின் இடிபாடுகள் விழுந்தன. 
  இந்த விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 29 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புத் துறை வீரர்கள் அங்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
  இந்த விபத்தை அடுத்து டி.என். சாலை முதல் ஜே.ஜே. மேம்பாலப் பகுதி வரை இணைக்கும் சாலையை பயன்படுத்த வேண்டாம் என்று வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
  பாலம் இடிந்து விழுந்த நேரத்தில் அந்த சாலையில் அருகே இருந்த சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததால் வாகன ஓட்டிகள் அந்தப் பகுதிக்கு அதிகளவில் வரவில்லை என்றும், இதனால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதேபோல், அந்த பாலத்தில் வியாழக்கிழமை காலையில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
  பிரதமர் இரங்கல்: விபத்து தொடர்பாக பிரதமர் மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மும்பை நடைமேம்பால விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai