சுடச்சுட

  

  முழு மாநில அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நாடகம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 15th March 2019 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sushil-kupta

  செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கிறார் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய். உடன் மாநிலங்களவை உறுப்பினர் சுசீல் குப்தா.


  தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பாஜக நாடகமாடுகிறது என்று ஆம் ஆத்மி  குற்றம் சாட்டியுள்ளது.
  தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தை முக்கிய பிரச்னையாக எழுப்பி மக்களவைத் தேர்தலை சந்திக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது. 
  அதன் ஒருபகுதியாக தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து பாஜகவின் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிக்கையை எரித்து ஆம் ஆத்மியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  இந்நிலையில், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தில்லி மக்களை பாஜக எவ்வாறு ஏமாற்றி வருகிறது என்ற கருப்பொருளில் அமைந்த ஆவணப்படத்தை தில்லி ஐடிஓவில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் ஆம் ஆத்மியின் தில்லி பொறுப்பாளர் கோபால் ராய் வெளியிட்டார்.
  பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் கூறியதாவது: பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற பொய்யான வாக்குறுதியை மக்களுக்கு வழங்கி தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. 
  ஆனால், அந்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை. இப்போதுகூட தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை பாஜக தெளிவுபடுத்தவில்லை.
  தில்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கலாம் என சில பாஜக தலைவர்களும், வழங்கக் கூடாது என சில பாஜக தலைவர்களும் கூறி வருகிறார்கள்.  
  பாஜகவின் இந்த இரட்டை நிலைப்பாட்டைக் கண்டித்து தில்லியில் உள்ள அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை எரிக்கவுள்ளோம். இந்த விவகாரத்தில் பாஜக இனியும் நாடகமாடாமல் தனது நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai