சுடச்சுட

  

  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இன்று சம்பளம் கிடைக்கும்: நிர்வாக இயக்குநர் தகவல்

  By DIN  |   Published on : 15th March 2019 09:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bsnl


  பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு இன்று சம்பளம் வழங்கப்படும் என அதன் நிர்வாக இயக்குநர் அனுபவம் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார். 

  இந்தியா முழுவதும் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ள பிஎஸ்என்எல் நிறுவனம், தனது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் கடும் நிதி பற்றாக்குறையில் சிக்கித் தவித்து வருகிறது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  இந்நிலையில், நிர்வாக இயக்குநர் அனுபவம் ஸ்ரீவஸ்தவா வெளியிட்டுள்ள அறிக்கையில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதம் சம்பளம் இன்று வழங்கப்படும். 

  மார்ச் மாதத்தில் ரூ.2,700 கோடி இயல்பான வருவாய் வரும் என எதிர்பார்த்தோம். இதில் ரூ.850 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. மூலதன தேவைக்காக ரூ.3,500 கோடி வங்கிக்கு செலுத்த உள்ளோம். இதன்மூலம் இனி வரும் மாதங்களில் சம்பளம் வழங்குவதில் தாமதம் இருக்காது என தெரிவித்துள்ளார்.

  மேலும் இந்த விவகாரத்தில் உதவிய தொலைத்தொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

  இந்தியா முழுவதும் 1.76 லட்சம் ஊழியர்களை கொண்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 சதவீத ஊழியர்களும், 16 ஆயிரம் எம்டிஎன்எல் ஊழியர்களும் அடுத்த 5-6 ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளனர். 

  பிஎஸ்என்எல் நிறுவனத்த்தின் 1.70 லட்சம் ஊழியர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தனியார் செல் நிறுவனங்களை தாங்கிப்பிடிக்கும் நரேந்திர மோடி, அரசு நிறுவனத்தை தகர்த்துக் கொண்டிருப்பது ஏன்? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai