விரைவில் பெங்களூருச் சாலைகள் இருளில் மூழ்கும் அபாயம்

பெங்களூரு மின்சார வாரியத்தில் சாலை மின் விளக்குகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
விரைவில் பெங்களூருச் சாலைகள் இருளில் மூழ்கும் அபாயம்


பெங்களூரு: பெங்களூரு மின்சார வாரியத்தில் சாலை மின் விளக்குகளை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

கடந்த 15 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஒப்பந்தப் பணம் ரூ.32 கோடி நிலுவையில் இருப்பதைக் கண்டித்தும், உடனடியாக பணத்தை வழங்கக் கோரியும் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளவிருக்கிறார்கள்.

இதே பிரச்னைக்காக, பெங்களூரு மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியாளர்களும், கழிவுநீர் வடிகால்வாயை பராமரிக்கும் தொழிலாளர்களும் கூட காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர்.

இன்னும் ஒரு வார காலத்துக்குள் நிலுவைத் தொகை வராவிட்டால், கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கும். தெரு விளக்குகளை எரியவிட மாட்டோம். ஒரு வருடத்துக்கும் மேலாக நிலுவைத் தொகையைக் கேட்டு வருகிறோம் என்று தொழிலாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் 4.7 லட்சம் தெரு விளக்குகள் உள்ளன. இதனை பராமரிக்க 120 ஒப்பந்ததாரர்கள் நியமிக்கப்பட்டு அதற்காக ரூ.26 கோடி பணம் ஒதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com