சுடச்சுட

  
  YS-Vivekananda-Reddy


  ஒய்எஸ்ஆர் விவேகானந்த ரெட்டி இன்று காலை மாரடைப்பால் காலமானார். 

  ஆந்திர மாநில முன்னாள் முதல்வவர் ஒய்எஸ்ஆர் ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர், மக்களவையின் முன்னாள் உறுப்பினரும், ஆந்திரா மாநில முன்னாள் அமைச்சருமான ஒய்எஸ்ஆர் விவேகனாந்த ரெட்டி(68) இன்று காலை கடப்பா மாவட்டம் புலிவென்டுலா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

  1989 மற்றும் 1994 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புலிவென்டுலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விவேகனாந்த ரெட்டி, 1999 மற்றும் 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடப்பா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றவர்.

  2009 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற விவேகனாந்த ரெட்டி, கிரண் குமார் ரெட்டி அமைச்சரவையில் வேளாண் அமைச்சராக பணியாற்றியுள்ளார். 

  2011 ஆம் ஆண்டு தேர்தலில் புலிவென்டுலா தொகுதியில் அவரது அண்ணன் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மனைவியும்,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயுமான விஜயம்மாக்கு எதிராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார் விவேகனாந்த ரொட்டி. 

  பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய விவேகானந்த ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்ட அவர், 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai