பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும்: அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா

பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும் என  பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும்: அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா


பிரதமர் மோடிக்கு பதிலாக புதிய தலைமை பொறுப்பேற்க வேண்டும் என  பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். 
பிகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதி பாஜக அதிருப்தி எம்.பி. சத்ருகன் சின்ஹா, பிரதமர் மோடிக்கு எதிராக தனது கருத்துகளை சுட்டுரை மூலமாகவும், பல்வேறு வடிவிலும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். 
அடுத்த வாரம் நடைபெற உள்ள பிராந்தியக் கட்சிகளின் கூட்டணியான மகா கூட்டணி கூட்டத்துக்கு முன்பு தன்னுடைய அரசியல்  நிலைப்பாடு குறித்து சத்ருகன் சின்ஹா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர் பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவுகளில் தெரிவித்துள்ளதாவது: கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் மோடி ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்று, ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்கவில்லை. இதனால், தனது நிறை, குறைகளை அவரால் அறிந்துக் கொள்ள முடியாமல்போய் விட்டது. 
ஆனால், இப்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனிவரும் நாள்களில் பத்திரிகையாளர்களை நீங்கள் (மோடி) சந்திக்க நேரிடக் கூடும். அதற்காக, இப்போதிருந்தே ஒத்திகை பார்த்து, எப்படி நடிக்க வேண்டும் என்று  உங்களை (மோடி)  நீங்களே இயக்கி, தயார்படுத்திக் கொள்ளுங்கள். நான் அறிந்த வரையில் ஜனநாயக உலகில், தனது ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கேள்வி-பதில்களை எதிர்கொள்ளாத பிரதமர் என்ற மோசமான வரலாற்றை நீங்கள் ஏற்படுத்தி விட்டீர்கள்.
நீங்கள் (மோடி) தலைமை பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள இதுவே மிகச் சரியான, சிறந்த தருணம் ஆகும். எனவே, மாற்று அரசு ஏற்படுவதற்கு முன்பு, புதிதாக, நல்ல தலைமை பொறுப்பேற்க வேண்டியது அவசியம்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 150க்கும் மேற்பட்ட புதிய திட்டங்களை அவசரமாக ஒரே மாதத்தில் அறிவித்தீர்கள். இதை மேலோட்டமாக காணும்போது, தேர்தல் நடத்தை விதிகளுக்குட்பட்டதாகவே இருக்கும். 
ஆனால், உண்மையில் இது மிகத் தாமதமாகவும், மிகக் குறைந்தளவில் நடத்தப்படும் ஒரு மொத்த வியாபாரத்துக்கு இணையான செயலாகும் என்று விமர்சித்துள்ளார்.  
கடந்த 1990ஆம் ஆண்டிலிருந்து பாஜகவில் இருந்து வரும் சத்ருகன் சின்ஹா வாஜ்பாய் அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்ஹா, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோரை தொடர்ந்து விமர்சித்து வருவதுடன், கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் ஒதுங்கியே உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com