பிரிட்டனில் ஆராய்ச்சியாளர்களுக்கான பணி விசா வரம்பு நீக்கம்: இந்தியர்களுக்கு சாதகம்

பிரிட்டனில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.


பிரிட்டனில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பால் இந்தியர்கள் பெருமளவில் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிலிப் ஹேமண்ட் புதன்கிழமை தாக்கல் செய்த வருடாந்திர பட்ஜெட் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பிரிட்டன் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்பப் புரட்சி முக்கியப் பங்கு வகிக்கிறது. அத்தகையப் புரட்சியில் பிரிட்டனை சிறந்து விளங்குவதை உறுதி செய்வதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம்.
அதன் ஒரு பகுதியாக, பிரிட்டனில் ஆராய்ச்சிப் பணியாற்ற விரும்புவோருக்கு வழங்கப்பட்டு வரும் விசாக்களுக்கான வரம்பு தளர்த்தப்படுகிறது.
வரும் செப்டர் மாதம் முதல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றார் அவர்.
இந்த அறிவிப்பால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பலனடைவர்கள் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் அரசின் புள்ளிவிவரப்படி, மிக உயர்ந்த கல்வித் தகுதியுடன் அங்கு பணியாற்றும் வெளிநாட்டினரில் 54 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த ஆண்டு மட்டும், இந்தப் பிரிவைச் சேர்ந்த இந்தியப் பணியாளர்களின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. எனவே, இத்தகைய பணி விசாக்களுக்கான வரம்பு தளர்த்தப்படுவது இந்தியர்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com