மேற்கு வங்கத்தில் வெடி பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் மேற்கு வங்க சிஐடி போலீஸார் அதிக அளவில் வெடி பொருள்களை


மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தில் நடைபெற்ற சோதனையில் மேற்கு வங்க சிஐடி போலீஸார் அதிக அளவில் வெடி பொருள்களை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
சல்டோரா காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதியில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். அப்போது ஒரு வீட்டில், 2,650 கிலோ ஜெலட்டின் குச்சிகளும், 6,650 கிலோ அமோனியம் நைட்ரேட் மருந்துகளும், 52,500 எலக்ட்ரானிக் டெட்டனேட்டர்களும் கண்டெடுக்கப்பட்டன. 
கார், இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒடிஸா, தெலங்கானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து இந்தப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று அந்த அதிகாரிகள்  தெரிவித்தனர்.
கொல்கத்தா காவல் துறை கடந்த வாரம் சுமார் 1,000 கிலோ பொடாசியம் நைட்ரேட் (வெடிபொருள் தயாரிப்புக்காக பயன்படும்) வேதிப் பொருளை சித்பூர் பகுதியில் பறிமுதல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com