சுடச்சுட

  

  காஷ்மீரில் பள்ளத்தாக்கில் வாகனம் கவிழ்ந்து விபத்து:  5 குழந்தைகள் உள்பட 11 போ் பலி

  By DIN  |   Published on : 16th March 2019 05:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  road_accident


  ஜம்மு-காஷ்மீா் மாநிலம், ராம்பண் மாவட்டத்தில் உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 4 பெண்கள், 5 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 

  ராம்பண் மாவட்டத்தின் சாதெர்கோடு பகுதியில் இருந்து ராஜ்கர் நோக்கி சென்று கொண்டிருந்த வாகனம், பக்லிகர் பகுதி அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து. 

  இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்ப வ இடத்திற்கு விரைந்து உள்ளூர் மக்களுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் 3 மாத குழந்தைகள் உள்பட 5 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

  இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் உள்பட 4 பேர் ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai